search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய மாணவர் படை"

    • தேசிய மாணவர் படை மாணவிகள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு, மாணவர்கள் விழிப்புணர்வு உரையாற்றினர்.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி தேசிய மாணவர் படை பெண்கள் பிரிவை சேர்ந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம் முன்னிலையிலும், தேசிய மாணவர் படை உதவி அதிகாரி அம்பிகா தேவி, ஒருங்கிணைப்பிலும் தூய்மைபணி நடைபெற்றது. மேலும், தேசிய மாணவர் படை மாணவர்கள் குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அங்குள்ள மருத்துவர் மற்றும் அலுவலர்களுடன் உரையாடி, வந்திருந்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினர். அவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்து தூய்மை இந்தியா இயக்கம்- சமூக சேவையை திறம்பட நடத்தினர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் தேசிய மாணவர் படைக்கு ஆள் தேர்வு நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 87 மாணவர்களும், 35 மாணவிகளும் பங்கு பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, தேசிய மாணவர் படைக்கான மாணவர் சேர்க்கை கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. கணினி பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியரும், தேசிய மாணவர் படையின் ஒருங்கிணைப்பாளருமான கணேஷ்பாபு மற்றும் விருதுநகர் பயிற்சியகத்தை சேர்ந்த பெருமாள், பிரபு ஆகியோர் இணைந்து சேர்க்கை முகாமை நடத்தினர். மேலும் உடல்நிலை குறித்த புரிதல் வேண்டும் என்றும், இன்றைய பெருந்தொற்று காலத்தில் உடல்நிலை பேணிக்காத்தலின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.

    இந்த சேர்க்கை முகாமில் மாணவர்களுக்கு 1200 மீ ஓட்டமும், மாணவிகளுக்கு 800 மீ ஓட்டமும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்குத் தண்டால் மற்றும் உடல் தகுதி சோதனைகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 87 மாணவர்களும், 35 மாணவிகளும் பங்கு பெற்றனர். இறுதியில் 30 மாணவர்களும், 12 மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முடிவில் ஏஞ்சல் ராணி நன்றி கூறினார்.

    • பயிற்சி முகாமில் 17 பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் தேசிய மாணவர் படையின் சிறந்த மாணவிகள் தேர்வு நடக்கிறது.

    நெல்லை:

    தேசிய மாணவர் படையின் 3-வது தமிழ்நாடு பெண்கள் பட்டாலியனின் 4 மாவட்ட பள்ளி, கல்லூரி வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகள் பாளையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை மாணவிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

    வருகிற 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் தேசிய மாணவர் படையின் சிறந்த மாணவிகள் தேர்வு நடக்கிறது. இதில் அணிவகுப்பு, துப்பாக்கி சுடுதல், கலை, சமூக செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட வர்கள் மண்டல அளவி லான போட்டி களுக்கு தேர்வு செய்யப்பட உள்ள னர். அதில் தேர்வாகும் வீராங்கனைகள் குடியரசு தின விழா ஒத்திகைக்கு தகுதி பெறுவார்கள்.

    இன்று நடந்த போட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தப்பட்டது.இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    20 மீட்டர் அளவில் உள்ள இலக்கை 5 ரவுண்டுகள் சுடும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் இலக்கை நோக்கி சுட்டு அசத்தினர். அதிக முறை இலக்கில் சரியாக சுட்ட மாணவிகள் மதிப்பெண் அடிப்படையில் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

    விழா தொடக்கமாக கொடியேற்றப்பட்டது. பின்னர் சிறப்பு அழைப்பாளர்கள் சிறப்புரையாற்றினர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகரம் பப்ளிக்பள்ளியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளி முதல்வர் ஞானப்பண்டிதன் தலைமை தாங்கினார். கர்னல் ஜே.பி.எஸ். சவுஹான் ,கமாண்டிங் அதிகாரி மற்றும் சுபேதார் மேஜர் ரவீந்தரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    மாணவர்களின் வரவேற்பு அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் சிறப்பு அழைப்பாளர்கள் சிறப்புரையாற்றினர்.
    ×